மகான் அமர்நீதி நாயனார் அருளிய துல்லிய ஆசி நூல் சுவடி

முருகப்பெருமான் துணை

மகான் அமர்நீதி நாயனார் அருளிய துல்லிய ஆசி நூல்

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 16.11.2021 ,

1. அரங்கனே ஞானச்சுடரே
ஆறுமுகனே அருள் தயவே
வரங்கள் தந்து அருளுகின்ற
வாழும் ஞானியே வள்ளலே

2. வள்ளலே உன் பெருமை கூறி
வழங்குவேன் துல்லிய ஆசி
சொல்லவே பிலவ துலை திங்கள்
சுருதிபடி முப்பான்திகதி குசன் வாரம்
( பிலவ வருடம் ஐப்பசி மாதம் 30 ம் நாள் , 16.11.2021 செவ்வாய்கிழமை )

3.வாரமதில் அமர்நீதி நாயனாரும்
வழங்குவேன் உலகோர் நலம்பெற
சோரம் போக்கும் சன்மார்க்க
சுத்த சைவ நெறி ஏற்றுவர

4.வருகவே ஞானிகள் அவதாரம்
வரலாற்றை அறியும் வாய்ப்பு
முருகப்பெருமானே அரங்கனெனும்
மூலமும் தெளிவும் கண்டடைந்து

5.அடைந்துமே ஞானியர் வழியை
அகலா தொடர நேரும்
தடையற பிறப்பின் ரகசியமும்
தவ தரும பலத்தின் அவசியமும்

6.அவசியமும் உணர்த்தப்பட்டு நன்கு
அரங்கஞானி வழி சர்வபலமும்
புவனம் காக்கும் சக்தியும்
புண்ணியவான்களும் ஆகி வருவோர்

7. வருவோர் அரங்கன் ஆசியால்
வல்லமையும் தேற்றமும் பெறுவர்
குருவாக அரங்கன் காப்புத்தர
கும்பிட்டு வரும் மக்களெல்லாம்

8.எல்லாவகையும் கீர்த்தி
இணையிலா சக்தியாகக் கிட்டி
வல்லமையும் வளர்ச்சியும்
வந்தடையும் ஞானிகள் ஆசிபட

9. ஆசிதரும் தலைவன் ஆகவே
ஆறுமுகனும் அரங்கனுக்குள்ளே
வாசி நடத்தி அருளிவர
வணங்கி வருகின்ற மக்களுக்கு

10. மக்களுக்கு மரணம் விலகும்
மறுமையும் அகலுமப்பா
ஆக்கமுடன் அருள் பலமும்
ஆற்றலாக வந்து இயங்கும்

11. இயங்கவே ஞானவான்களாகி
எல்லாத் திக்கும் ஞானிகள்
தயங்கா ஞானிகள் அருளவே
தரணி ஞான ஆட்சி பெறும்
துல்லிய ஆசி முற்றே
-சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *