பாகம் : 795 மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் | Part: 795 Wisdom Advice Blessing Book by Mahan Subramaniar

முருகப்பெருமான் துணை 

முருகப்பெருமான் தலைமையில் உலகம் அனைத்தும் ஞானியர்களின் ஆட்சிக்கு உட்படும். 

இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக மனமுவந்து கைப்பட எழுதிய அருள்வாக்கு 
இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும் . 
துறையூர் ஒங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு 

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 795 
(Part: 795 Wisdom Advice Blessing Book by Mahan Subramanian)

 
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 
 02.12.2021 , வியாழக்கிழமை 
 
1. ஞானபலம் கொண்ட அரங்கனே 
ஞானிகள் துணைகொண்ட தேசிகனே 
வானவர்கள் அருளாசி பெற்றுஇனிதே 
வையகத்தில் வாழுகின்ற மகாஞானியே 
 
2. ஞானியே ஆறுமுக அரங்கனே 
ஞாலமதில் உந்தனுக்கு சுப்ரமணியர் யானும் 
கனிவுகொண்டு ஞான அறிவுரை ஆசி தன்னை 
கண்டுரைப்பேன் பிலவ தேள் திங்கள் தன்னில் 
( பிலவ வருடம் கார்த்திகை மாதம் 16 ம் நாள் , 02.12.2021 வியாழக்கிழமை ) 
 
3. தன்னிலே அரங்கன் தர்மபலம் 
தரணியை தர்மலோகமாக மாற்றும் 
அண்ணல் உன் சன்மார்க்கக் கொள்கை 
அகிலத்தை தயவு நெறிமிக்க பூமியாக மாற்றும் 
 
4. மாற்றத்தை செய்து மக்களை காப்பேன் என 
மகா அவதாரம் புரிந்த அரங்கனே 
ஆற்றல்பட நீ செய்கின்ற சேவை கொண்டே 
ஆறுமுகன் யான் அகிலத்தில் மாற்றம் புரிவேன் 
 
5. புரியவே உயர்வான தொண்டர் படைகளை 
புண்ணியபலத்தோடு கொண்ட அரங்கனே 
அறியவே அவர்களெல்லாம் தெளிவு கொண்டு 
ஆன்ம ஆத்மபலம் கூடி சிறக்க 
 
6. சிறக்கவே ஆறுமுகப்பெருமான் யான் 
சித்தியாக உன் கரம்பட தீட்சையாக அருள்வேன் 
உத்தமனே அரங்கன் உன் உபதேசங்கள் உலகோர்க்கு ஞானம் தந்தருளும் 
சத்தியன் நீ செய்கின்ற தவபலம் சாற்றிடுவேன் கலியுகத்தை ஞானயுகமாக மாற்றம் செய்யும் 
 
7. செய்யவே அரங்கனே சிறந்த கலியுத்தின் ஞானி 
சித்திதரும் கனிவேலவன் என் கருணை கொண்ட தவசி 
உத்தமமாய் அரங்கன் மார்க்கம் உலகம் அறிய 
உலகமாற்றம் சடுதி நடந்தேறும் 

 

        ஞான அறிவுரை ஆசி முற்றே

 

-சுபம்
Wisdom Advice Blessing Book by Mahan Subramaniar

 

 

மாற்றத்தை செய்து மக்களை காப்பேன் என 

மகா அவதாரம் புரிந்த அரங்கனே 

ஆற்றல்பட நீ செய்கின்ற சேவை கொண்டே 

ஆறுமுகன் யான் அகிலத்தில் மாற்றம் புரிவேன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *