எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல் | This week’s event in India, Tamil Nadu, about the future mahan Agasthiyar jeeva nadi news ongarakudil

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!
ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான்

எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

பிலவ வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி முதல் மார்கழி மாதம் 25ம் திகதி வரை (02.01.2022 ஞாயிறு முதல் 09.01.2022 ஞாயிறு வரை) சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A.,B.Ed. 1.தவராசனே ஆறுமுக அரங்கனே தரணிகாக்க அவதாரம் புரிந்த அவதாரமே அரங்கன் நீ கேட்க அகத்தியனும் வார ஆசிதனை உரைப்பேன் 2.உரைப்பேன் இந்தியா தமிழகத்தில் உயர்வான சிலை திங்கள் தன்னில் குறைவிலா மூவாறுதிகதிமேல் இருபானை திகதி வரை கூறிடுவேன் நிகழ்வான வருங்கால பலன்கள் தன்னை 3.தன்னிலே பேரிடராக வருகின்ற தாமுரைக்க புதிய வகை கிருமி இடரை இன்னல் போக்கும் நடவடிக்கையாக இந்தியா தமிழக ஆளுமைகள் தானும் 4. தானுமே களத்தில் இறங்கி தடுப்பு முறைகள் கடைபிடிக்க ஞானவான்கள் ஆலோசனைபட நம்பிக்கை தரும் தருமநெறி போற்றி 5. போற்றி வழிபாடுகள் பெருக்கி பூமியெங்கும் தூய்மை பணிகளை ஆற்றல்பட மக்களிடை விழிப்புணர்வை அய்யம் கொள்ளா ஏற்படுத்தி வர 6.வருகவே எங்கும் எதிலும் வதைகள் அழிவுகள் இல்லா வருமுலகில் பாதுகாப்பு கூடி வந்தடையும் உயிர்காப்பு சிறப்பு 7. சிறப்பான சேவையான வகை செப்பிடுவேன் ஆளுமை சக்திகள் அறத்தின்வழி செயல்பாடு காண அகிலம் வியக்க இந்தியா தமிழகம் 8. தமிழகம் ஆபத்தின்றி மீளும் தளர்வுடன் கூடிய கட்டுப்பாடுகள் தமிழகம் இந்தியா கடைபிடிக்க தட்டுப்பாடுகள் பொருளாதார வகை அனுகா 9. அனுகா வளர்ச்சிநிலை கண்டு அறிவிப்பேன் மாற்றம் காணும் ஞான தேசிகன் அவதார மகிமை நன்கறிந்து ஆளுமைகள் அனுகி 10. அனுகி ஆறுமுகன் வழிபாட்டுடன் ஆற்றல்பட ஆளுமை நடத்திட ஞான ஆட்சிதனை இந்தியா தமிழகம் ஞானபண்டிதன் அருளால் அடையும் வார ஆசி முற்றே -சுபம்-

https://youtu.be/_0J_S2fXrIc


முருகப்பெருமான் துணை
மகான் அகத்திய மகரிஷி அருளிய வார ஆசி நூலின் சாரம் :

பிலவ வருடம் மார்கழி மாதம் 18 ம் நாள் 02.01.2022 ஞாயிற்று கிழமை முதல் மார்கழி மாதம் 25 ம் நாள் 09.01.2022 ஞாயிற்று கிழமை முடிய உள்ள கால நிகழ்வுகள் :

எல்லையில்லா தவம் செய்து வெற்றி கண்டிட்ட தவராசனே முருகப்பெருமானின் அம்சமே ஆறுமுக அரங்கமகா தேசிகரே இவ்வுலகை காத்திடவே அவதரித்திட்ட அரங்க மகானே தாம் கேட்க இந்தியா தமிழகத்தில் பிலவ வருடம் மார்கழி மாதம் 18 ம் நாள் 02.01.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் மார்கழி 25 ம் நாள் 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை முடியஉள்ள காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை அகத்திய மகரிஷியானும் வார ஆசி நூலாக உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகத்தியமகரிஷி .

இவ்வுலகில் மீண்டும் இயற்கை பேரிடராக வருகின்ற புதிய வகையினால் ஆகிய நச்சுக்கிருமி ( உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா வைரஸ் புதிய வகை கொரோனா வைரஸ் ஒமைக்ரான் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ) தாக்குதலை விதமாகவும் நச்சுக்கிருமிதுன்பம் போக்கும் விதமாகவும் முன்னெச்சசிரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமப்பா !தேசத்தை ஆட்சி புரிபவர்கள் ஞானவான்கள் துணையை பெற்றிட வேண்டுமப்பா . நம்பிக்கையுடன் தரும நெறிகளை கடைபிடித்து கடவுள் நம்பிக்கையுடன் வழிபாடுகளை செய்து வருவதுடன் தேசத்தை சுகாதாரமாக வைத்திடவும் , சுத்தமாக இருந்து கிருமிதொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் விதமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . 


    இவ்விதம் செயல்பட உயிர் பலிகள் இல்லாமல் பாதுகாப்புடன் உலகம் நச்சுக் கிருமி தாக்கத்தில் இருந்து விடுபடும் மக்களின் உயிர்கள் காக்கப்படும் , அரசு அறநெறிகளை கடைபிடித்திட உலகமே வியக்குமளவு இந்தியா தமிழகம் ஆபத்தின்றி மீளும் . 

     தளர்வுடன் கூடிய கட்டுப்பாடுகள் தன்னை கடைபிடித்திட தட்டுப்பாடுகள் இல்லாத பொருளாதார வீழ்ச்சி இல்லாத வகையில் வளர்ச்சி நிலை உண்டாகி நல்ல மாற்றங்கள் உண்டாகும் . 

    அரங்க மகானின் அவதாரத்தின் மகிமைகளை உணர்ந்து அரங்கரை அனுகி முருகப்பெருமான் வழிபாட்டை செய்து கொண்டு மக்களை வழிநடத்திட இந்தியா தமிழகம் ஞான ஆட்சியை முருகப்பெருமான் அருளால் அடைந்து சிறப்படையும் எனக் கூறுகிறார் மகான் அகத்திய மகரிஷி 


-சுபம்


தளர்வுடன் கூடிய கட்டுப்பாடுகள் தன்னை கடைபிடித்திட தட்டுப்பாடுகள் இல்லாத பொருளாதார வீழ்ச்சி இல்லாத வகையில் வளர்ச்சி நிலை உண்டாகி நல்ல மாற்றங்கள் உண்டாகும் அரங்க மகானின் அவதாரத்தின் மகிமைகளை உணர்ந்து அரங்கரை அனுகி முருகப்பெருமான் வழிபாட்டை செய்து கொண்டு மக்களை வழிநடத்திட இந்தியா தமிழகம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *